முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு : 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

வெள்ளிக்கிழமை, 6 ஜூன் 2025      தமிழகம்
Engg 2023-07-13

Source: provided

சென்னை : தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் என்ஜினீயரிங் படிப்புக்கு இதுவரை 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 11 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரிகளிலும் தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்பவும், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும் 12 பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளன. இதனால், அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 54 கூடுதல் இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நேற்றுடன் நிறைவடைய உள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கு மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஏதேனும் விளக்கங்கள் தேவை இருந்தால், தமிழகம் முழுவதும் நிறுவப்பட்டு உள்ள 110 தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவும், [email protected] என்ற இ-மெயில் முகவரி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து