முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன், மியான்மர் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள்: அமெரிக்காவுக்குள் நுழைய தடை

வியாழக்கிழமை, 5 ஜூன் 2025      உலகம்
Trump 2023-04-13

நியூயார்க், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதை தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.  .

ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அதேபோல, புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 ட்ரம்ப் கையெழுத்திட்ட பிரகடனத்தில், அமெரிக்காவில் நுழைய அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டினர் அமெரிக்கர்களுக்கோ அல்லது அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கோ தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்த விசா வழங்கும் செயல்முறையின் போது அமெரிக்கா விழிப்புடன் இருக்க வேண்டும்.  எனவே அமெரிக்காவிற்கு ஏற்படும் அபாயங்களை மதிப்பிடுவதற்கு போதுமான தகவல்கள் இல்லாத வெளிநாட்டினரின் நுழைவை தடுக்க பிரகடனத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அவசியம்’ என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து