முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சுற்றுச்சூழல் தினம்: 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார் பிரதமர் மோடி

வியாழக்கிழமை, 5 ஜூன் 2025      இந்தியா
PM-Modi-2025-06-05

புதுடில்லி, டில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் மோடி 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார். அவர் மண்வெட்டி வைத்து குழி தோண்டி, மரக்கன்றை நடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று டில்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் மோடி 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார். அவர் மண்வெட்டி வைத்து குழி தோண்டி மரக்கன்றை நடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் கட்ச் நகருக்கு விஜயம் செய்தபோது, ​​1971ம் ஆண்டு போரில் குறிப்பிடத்தக்க துணிச்சலை வெளிப்படுத்திய பெண்கள் குழு பிரதமர் மோடியைச் சந்தித்து சிந்தூர் மரக்கன்றுகளை வழங்கியது. இந்த மரக்கன்றை நடவு செய்து பராமரிப்பேன் என அந்த பெண் குழுவிடம் பிரதமர் மோடி கூறியிருந்தார். தற்போது அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார்.

இதற்கிடையே, சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டில்லியில் 200 எலெக்ட்ரிக் பஸ் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி உடன் டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, டில்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து