முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பணி, கட்சி வளர்ச்சி பணி குறித்து 7 மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா முக்கிய ஆலோசனை

புதன்கிழமை, 11 ஜூன் 2025      தமிழகம்
Pramalatha

Source: provided

சென்னை : தேர்தல் பணி, கட்சி வளர்ச்சி பணி குறித்து ஏழு மாவட்ட நிர்வாகிகளுடன் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா 4 நாட்கள் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த கூட்டம் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை என 2 பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. முதல் நாளான நேற்று  தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டார்.

மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி என 7 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற நேற்றைய கூட்டத்தில் தேர்தல் பணி, கட்சி வளர்ச்சி பணி, தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கிளைக் கழகங்களை வலுப்படுத்துவது, சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றியம், நகரம், வார்டு, பகுதி, வட்டம் பேரூர் வார்டுகளுக்கு சார்பு அணி நிர்வாகிகள் தேர்வு செய்வது, பூத் முகவர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:- நீங்கள் அனைவரும் உங்களுக்கான பணிகளை தொடங்க வேண்டும். நாம் மேற்கொள்ளும் அனைத்து பணிகளும் 2026 தேர்தலுக்கான பணியாகவே இருக்க வேண்டும். போனில் பேசி நான் அதைச் செய்துவிட்டேன், இதை செய்து விட்டேன் என்று கூறாமல் களத்திற்கு சென்று ஒவ்வொருவரும் வெற்றி வீரர்களாக பணியாற்ற வேண்டும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை முழுமையாக ஆராய்ந்து அனைவரும் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.

பூத் கமிட்டி நிர்வாகிகள், கிளைக் கழக தொண்டர்கள் வரை அனைவரையும் நிர்வாகிகள் சந்தித்து பேச வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவே இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை அனைவரும் தெரிவியுங்கள். எங்கள் கருத்துக்களையும் கேட்டுக்கொள்ளுங்கள். நமது பணிகள் அனைத்தும் தேர்தலில் வெற்றி பெறும் வகையிலேயே அமைய வேண்டும். இவ்வாறு பிரேமலதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து