முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிர் பிழைத்தது எப்படி? - விமான விபத்தில் தப்பித்த விஷ்வாஸ் குமார் பேட்டி

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2025      இந்தியா
Modi 2025-06-13

Source: provided

அகமதாபாத் : உயிர் தப்பியது எப்படி என விமான விபத்தில்  தப்பித்த ஒற்றை நபரான விஸ்வாஸ் குமார் பேட்டியளித்தார்.

விமான விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் விபத்தில் உயிர் தப்பிய விஷ்வாஸ், விமானம் மோதிய இடத்தில் இருந்ததால் காயமடைந்த மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிரதமர் மோடி நலம் விசாரித்துவிட்டுச் சென்ற பிறகு விஷ்வாஸ்,  பேட்டி அளித்தார்.  “விமானம் புறப்பட்ட பிறகு, 5-10 வினாடிகளில் அனைத்தும் சிக்கிக் கொண்டது போல் நாங்கள் உணர்ந்தோம். விமானத்தில் பச்சை மற்றும் வெள்ளை விளக்குகள் இயக்கப்பட்டன. புறப்படுவதற்காக விமானத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டதாக நான் நினைத்தேன். அது கட்டிடத்தில் மோதியது. இதெல்லாம் என் கண் முன்னே நடந்தது.

நான் அமர்ந்திருந்த இடம் விமானம் மோதிய விடுதி பக்கத்தில் இல்லை.  சிறிது இடம் இருந்தது. என் கதவு உடைந்தவுடன், கொஞ்சம் இடம் இருப்பதைக் கண்டேன், பின்னர் நான் வெளியேற முயற்சித்தேன், நான் வெளியே வந்தேன்.  நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை.   இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி என்னிடம் கேட்டார். இதெல்லாம் என் கண் முன்னே நடந்தது. நான் எப்படி காப்பாற்றப்பட்டேன் என்று என்னால் நம்பவே முடியவில்லை” என விஷ்வாஸ் குமார் ரமேஷ் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து