முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புவனேஸ்வரம் - அபுதாபி இடையே நேரடி விமான சேவை தொடங்கியது

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      இந்தியா
Air

புவனேஸ்வர், ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரத்திலிருந்து, அபுதாபிக்கு நேரடி விமான சேவையை அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி துவங்கி வைத்துள்ளார்.

புவனேஸ்வரத்தின் பிஜு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபிக்கு நேரடியான விமான சேவையை ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி நேற்று  (ஜூன் 12) துவங்கி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சுமார் 180 பயணிகளுடன் கூடிய இண்டிகோ விமானம் புவனேஸ்வரத்திலிருந்து புறப்பட்டுள்ளது. மேலும், ஒடிசாவில் விளைவிக்கப்பட்ட சுமார் 50 டன் அளவிலான மாம்பழமும் அபுதாபிக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், புவனேஸ்வரம் - விசாகப்பட்டிணம் இடையிலான விமான சேவையும் நேற்று முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அபுதாபி - புவனேஸ்வரம் இடையில் வாரந்தோறும் செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் நேரடி விமானம் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி கூறுகையில், புதியதாகத் துவங்கப்படும் விமான சேவைகளின் மூலம் மேற்கு ஆசிய நாடுகளுடன் நேரடி தொடர்புகளை உண்டாக்க ஒடிசாவுக்கு வாய்ப்பு உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து