எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : சச்சின் கோரிக்கையை ஏற்று இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு பட்டோடி பெயரிலேயே கோப்பை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
டெஸ்ட் தொடர்...
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி தொடங்க உள்ளது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் இது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பட்டோடி பெயரில்...
இதனிடையே இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை புதிய பெயரில் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 2007-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு மறைந்த இந்திய முன்னாள் கேப்டனான 'பட்டோடி' பெயரில் கோப்பை வழங்கப்பட்டு வந்தது.
புதிய பெயரில்...
இதனை மாற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அதற்கு பி.சி.சி.ஐ.-யும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி இனி வரும் இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட் தொடருக்கு அந்த பெயர் மாற்றப்பட்டு 'தெண்டுல்கர்- ஆண்டர்சன்' என்ற பெயரில் கோப்பை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட ஜாம்பவான் வீரர்களான சச்சின் தெண்டுல்கர் (இந்தியா) மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சனை (இங்கிலாந்து) கவுரவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
சச்சின் கோரிக்கை...
இருப்பினும் இது சச்சின் தெண்டுல்கருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. உடனடியாக பி.சி.சி.ஐ. மற்றும் இங்கிலாந்து வாரிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசிய அவர் பட்டோடி பெயரில் கோப்பையை வழங்க வேண்டும். அதுதான் சிறப்பாக இருக்கும் என வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்று இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு பட்டோடி பெயரிலேயே கோப்பை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த விவகாராத்தில் ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷாவும் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வார ராசிபலன்
14 Feb 2026


