முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2025      தமிழகம்
KKSSR-2025-06-17

விருதுநகர், நில அளவைகளை துல்லியமாக்கும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீமயமாக்கும் திட்டம் நேற்று (ஜூன் 17) தொடங்கப்பட்டது.  

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நில அளவை மற்றும் நிலவரித்துறை மூலம் தமிழகத்தில் உள்ள நில ஆவணங்களை நவீனமயமாக்கும் (நக்‌ஷா) திட்டம் முதல்கட்டமாக  காஞ்சிபுரம், திருவண்ணாமலை,  விருதுநகர்  உள்ளிட்ட 7 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் தொடக்க விழா விருதுநகரில் நேற்று நடைபெற்றது. கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு நவீன ட்ரோன் மூலம் நகர நில அளவைப் பணிகளைத் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின்கீழ் 13.85 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 49,886 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

1.67 கோடி இணைய வழி பட்டா மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சுமார் 41.7 லட்சம் இணைய வழி பட்டா மாறுதல் உத்தரவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார். இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்துறை இயக்குநர் மதுசூதணன் ரெட்டி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், நகராட்சித் தலைவர் மாதவன், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து