முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய வீரர்களை வீட்டிற்கு அழைத்து பேசினார் கோலி!

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2025      விளையாட்டு
Virat-Kohli 2025-06-17

Source: provided

லண்டன் : தொடக்க ஆட்டத்திற்கு முன்  இந்திய வீரர்களை லண்டனில் உள்ள தனது வீட்டிற்கு விராட் கோலி அழைத்துள்ளார். 

திடீர் ஓய்வு... 

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். ஆனாலும், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாட இருக்கிறார். ஓய்வுபெற்ற போதிலும் இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் நடவடிக்கைகளை விராட் கோலி கண்காணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டிற்கு அழைத்து...

இந்நிலையில், லீட்சில் தொடக்க ஆட்டத்திற்கு சில நாட்களுக்கு முன் புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ரிஷப் பண்ட், சிராஜ் மற்றும் சிலரை லண்டனில் உள்ள தனது வீட்டிற்கு விராட் கோலி அழைத்துள்ளார். கென்ட்டில் நடந்த அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்ததைத் தொடர்ந்து திங்கட்கிழமை இந்தியாவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே வீரர்கள் கோஹ்லியுடனான சந்திப்பிற்கு தயாராக இருந்தனர். 

2 மணி நேரம்....

இந்தச் சந்திப்பில் வரவிருக்கும் தொடர் பற்றிய பேச்சுவார்த்தைகள் முதல் கில் மற்றும் பண்ட் இளம் அணியை எவ்வாறு அணிதிரட்ட முடியும் என்பது வரை விவாதம் நடைபெற்றது என்றும், இந்த விவாதம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது எனவும் தெரிகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து