Idhayam Matrimony

திருப்புவனம் தடுப்பணை கட்டுமான பணி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2025      தமிழகம்
DCM-1-2025-06-17

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமான பணிகளை துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் 40.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் வைகை ஆற்றின் வலதுபுறம் பிரியும் பழையனூர் கால்வாய் மற்றும் அதே இடத்தில் இடதுபுறம் பிரியும் கானூர் கால்வாய் முதலியவை மிக முக்கியமான கால்வாய்களாகும். தற்சமயம் வைகை ஆற்றின் படுக்கை மட்டம் மண் அரிமானம் காரணமாக சுமார் 1.20 மீ ஆழம் அளவிற்கு மேல் தாழ்ந்து போய்விட்டதால், வைகை ஆற்றில் செல்லும் நீர் கானூர், பழையனூர் கால்வாய்களில் நீர் ஏறிச்செல்ல இயலாத நிலை உள்ளது. இதனால் மேற்காணும் கண்மாய்களின் பாசன ஆதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் 22.1.2025 அன்று  வைகை ஆற்றின் குறுக்கே 40.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று கானூரில் தடுப்பணை கட்டும் பணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டு, நீர் வளத்துறை அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தடுப்பணை கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைவாக முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினர்   ஆ.தமிழரசி ரவிக்குமார்,  மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உள்பட பலர் உடன் இருந்தனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து