முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இருப்பை காண்பித்துக் கொள்ள ஏதாவது சொல்வார்கள்: அமைச்சர் கே.என்.நேரு

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2025      தமிழகம்
KN-Nehru 2023 04 01

Source: provided

நெல்லை : இருப்பை காண்பித்துக் கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவரும், மற்ற எதிர்க்கட்சியினரும் ஏதாவது இதுபோல் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் அமைச்சர் கே.என்.நேரு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,  நயினார் நாகேந்திரன் புதிதாக தலைவராகி உள்ளார். தேர்தல் வருகிறது. அதற்காக புதிது புதிதாக கண்டுபிடித்து விரதம் இருக்கிறார். தமிழ்நாடு மிக மிக பாதுகாப்பான மாநிலம். முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். ஏ.டி.ஜி.பி. குறித்து புகார் வந்தபோது கூட முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். நயினார் நாகேந்திரன் ஏதாவது செய்து கொண்டிருப்பார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை எப்படி சுட்டார்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஒரு சில இடங்களில் ஒரு சிலர் செய்யும் செயல்களை தமிழ்நாடு முழுவதும் நடப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது. தமிழக முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு மற்றும் சாதி கலவரம் இல்லாத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அனைவரையும் அழைத்துப் பேசி சிறப்பாக ஆட்சியை கொண்டு போய் கொண்டு இருக்கிறார். தேர்தல் வரும்போது தங்களது இருப்பை காண்பித்துக் கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவரும், மற்ற எதிர்க்கட்சியினரும் ஏதாவது இதுபோல் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.

பா.ஜ.க. தேர்தலுக்கு அவர்கள் வேலையை செய்கிறார்கள். தி.மு.க. எங்கள் வேலையை செய்கிறோம். நாங்கள் பிடித்த இடங்களை விடுவோமா? விடமாட்டோம். கூடுதலான இடங்களை வெல்வதற்கு நாங்களும் முயற்சி எடுப்போம். வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. எடுக்கும் முயற்சிகளை விட கூடுதலான முயற்சிகளை தி.மு.க. எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து