முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுவன் கடத்தல் சம்பவம்: திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தியிடம் தீவிர விசாரணை

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2025      தமிழகம்
JaganMoorthi 2025-06-16

திருத்தணி, சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்காக,  நேற்று திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே காதல் திருமண விவகாரம் தொடர்பாக கடந்த 6-ம் தேதி 17 வயது சிறுவன் கடத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் கேட்டு புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது.

அப்போது நேரில் ஆஜரான பூவை ஜெகன் மூர்த்தியை, கூட்டத்தை கூட்டாமல் தனியாக சென்று போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் நேற்று காலை 10 மணியளவில் தன் வழக்கறிஞர்களுடன் பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீஸார், சிறுவன் கடத்தல் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து