முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்ஸ் திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      சினிமா
Cuts-Review 2025-06-16

Source: provided

நாயகன் ரங்கராஜ் சிறு வயதில் தாய், தந்தையை இழந்து, பின்னர் படித்து போலீஸ் இன்ஸ்பெக்டராகிறார். மனைவி, ஒரு குழந்தை என மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது, அவரது மனைவி மர்மமாக கொலை செய்யப்படுகிறார். மனைவியை கொலை செய்தவரை கண்டுபிடித்து பழிவாங்கும் கதையே கட்ஸ். விவசாயி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் என முதல் படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ரங்கராஜ், காதல், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என அனைத்து ஏரியாவிலும் கலக்கி இருக்கிறார். நாயகி ஸ்ருதி நாராயணன், கிராமத்து பெண்ணாக தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார். குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் சாய் தீனா, பிர்லா போஸ், டெல்லி கணேஷ், ஸ்ரீலேகா உள்ளிட்டோர் அழகாகவும் அளவாகவும் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. நாயகனாக நடித்திருக்கும் ரங்கராஜ், கதை எழுதி இயக்கவும் செய்திருக்கிறார். ஒரு நடிகராக தனது திறமையை நிரூபிப்பதற்காகவே காட்சிகளை வடிவமைத்து, பல கெட்டப்புகளில் நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். நடிகராக மெனக்கெட்டது போல் திரைக்கதையிலும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இயக்குநராகவும் ஸ்கோர் செய்திருப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து