முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : அவசர அவசரமாக தரையிறக்கம்

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2025      இந்தியா
IndiGo-flights 2024-01-09

Source: provided

மும்பை : கொச்சிியில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஓமன் நாட்டில் தலைநகர் மஸ்கட்டில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு நேற்று காலை இண்டிகோ விமானம் வந்தது. அந்த விமானம் பின்னர் கொச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டது.

காலை 9.31 மணிக்கு கொச்சி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 157 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 163 பேர் பயணித்தனர். விமானம் மராட்டிய மாநில வான் எல்லையில் பறந்துகொண்டிருந்தது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 

கொச்சி விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டு விமானம் மராட்டியத்தின் நாக்பூர் விமான நிலையத்தில் அவரச அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விமானம் முழுவதும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து