முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகமதாபாத் விமான விபத்து: டி.என்.ஏ. மூலம் அடையாளம் காணப்பட்ட 144 பேரின் உடல்கள்

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2025      இந்தியா
ahmedabad-plane-crash-2025-06-12

Source: provided

அகமதாபாத் : அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 144 பேரின் டி.என்.ஏ. உறுதி செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். இதில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் (வயது 68) பலியானார்.

உயிரிழந்தவர்களின் உடல்களில் பல அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 135 பேரின் டி.என்.ஏ. மாதிரிகள் அவர்களது உறவினர்களுடன் பொருந்தியுள்ளன. அவற்றில் 101 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் குஜராத், மராட்டியம், பீகார், ராஜஸ்தான் மற்றும் டையூவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 144 பேரின் டி.என்.ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கவி உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் சிலரது உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து