முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் கடைகள் மீது மக்கள் புகார் தந்தால் 30 நாட்களில் நடவடிக்கை: தமிழக அரசு உத்தரவு

புதன்கிழமை, 18 ஜூன் 2025      தமிழகம்
Tasmac-QR-line 2024-03-25

Source: provided

சென்னை : டாஸ்மாக் கடைகள் மீது மக்கள் புகார் தந்தால் 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 777 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் அமைக்கும் போது, கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் இருந்து நகர் பகுதியாக இருந்தால் 50 மீட்டரும், கிராமப்புறங்களில் 100 மீட்டர் தூரமும் இருக்க வேண்டும். ஆனால் இந்த விதிகளை மீறி பல கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து பொதுமக்கள் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காணலாம். அதேபோல் சில இடங்களில் கடைகள் வந்த பிறகு வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை வந்திருக்கும். இந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு அதற்கான விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி கடை வந்த பிறகு கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு இருந்தாலும், அந்த கடைகள் மீது புகார்கள் வந்தால் அதனை கலெக்டர் பரிசீலனை செய்து 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து