முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்கொலை படை தாக்குதல்: நைஜீரியாவில் 10 பேர் பலி

சனிக்கிழமை, 21 ஜூன் 2025      உலகம்
Nigeria-Attack 2025-06-15

Source: provided

அபுஜா : நைஜீரியாவின் வடக்கிழக்கு மாநிலத்திலுள்ள உணவகத்தில் தற்கொலைப் படை குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொர்னோ மாநிலத்தின் கொண்டூங்கா பகுதியில், நேற்று முன்தினம் மாலை வெடிகுண்டு கட்டி வந்த அடையாளம் தெரியாத நபர் அதை வெடிக்கச் செய்ததில், 10 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதிகளில், பெரும்பாலான தாக்குதல்களை போகோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் நடத்தி வருகின்றன. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நைஜீரியாவைச் சேர்ந்த இஸ்லாமிய கிளர்ச்சியாளர் அமைப்பான போகோ ஹராம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் அந்நாட்டின் பல முக்கிய நகரங்களை அச்சுறுத்தி வருகின்றது. இதனால், அந்நாட்டில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 20 லட்சத்துக்கும் மேலான மக்கள் இடமாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து