முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் மாயமான 400 கிலோ யுரேனியம்: அமெரிக்கா தகவல்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      உலகம்
Iran 2025-06-16

Source: provided

வாஷிங்டன் : ஈரான் வைத்து இருந்த 400 கிலோ செறியூட்டப்பட்ட யுரேனியும் எங்கே போனது என்று தெரியவில்லை என அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மாயமான இந்த யுரேனியம் மூலம் 10 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என தெரிகிறது. அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி ஈரான் மீது கடந்த இரண்டு வாரமாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வரும் நிலையில், நேற்று முன்தினம் அந்நாட்டின் முதன்மையான மூன்று அணுசக்தி நிலையங்களான போர்டோவ், நடான்ஸ், மற்றும் இஷாஹன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: ஈரான் சேமித்து வைத்து இருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே போனது என தெரியவில்லை. அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் சேதம் அடைந்து இருக்கும். அல்லது அழிந்திருக்கும். ஆனால், அதனை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. போர்டோவ் அணுசக்தி நிலையத்தை அழிப்பதே தாக்குதலின் நோக்கம். மற்ற நிலையங்களுக்கும் சேதம் ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டோம். தாக்குதலில், போர்டோவ் அணுசக்தி நிலையத்திற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு இருக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து