முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து தரவுகளை மீட்கும் பணி தீவிரம்

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      இந்தியா
ahmedabad-plane-crash-2

புதுடெல்லி, அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டிகளிலிருந்து தரவுகள் எடுக்கப்பட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏர் இந்தியா விமானம்  துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின்  உடனடி விசாரணைக்காக, ஜூன் 13, 2025 அன்று பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி பலதுறை குழு அமைக்கப்பட்டது.

 ஏ.ஏ.ஐ.பி. இயக்குநர் ஜெனரல்  யுகந்தர் தலைமையிலான குழு,  தொழில்நுட்ப உறுப்பினர்களுடன் இணைந்து தரவுகளை பிரித்தெடுக்கும் செயல்முறையை ஜூன் 24 மாலை தொடங்கின. கருப்புப் பெட்டியிலிருந்து விபத்து பாதுகாப்பு தொகுதி  பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் 25, அன்று மெமரி மாடுல் வெற்றிகரமாக அணுகப்பட்டு அதன் தரவு   ஆய்வகத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டது.  தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது.

இந்த தரவு பகுப்பாய்வு, விபத்தின்போது நிகழ்ந்த நிகழ்வுகளின் வரிசையை வெளிப்படுத்தும். இதன்மூலம், விமான விபத்துக்கான காரணங்களைக் கண்டறிவதோடு, பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் எதிர்கால நிகழ்வுகளைத் தடுப்பதற்கும் தேவையான தரவுகளை வழங்கும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம் ஜூன் 12 அன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 241 பேர் உட்பட 270 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து