முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்த குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      இந்தியா
AAP 2024-10-08

Source: provided

குஜராத்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற விசவதார் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ.-வான உமேஷ் மக்வானா, தனது கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா செய்துள்ள நிலையில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 

உமேஷ் மக்வானா காந்தி நகரில் உள்ள போடாட் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் கோலி என்ற இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும், குஜராத் சட்டமன்ற ஆம் ஆத்மி கட்சியின் கொறடாகவும் இருந்தார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரச்சினைகளை எழுப்ப ஆம் ஆத்மி தோல்வியடைந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார். மற்ற ஆம் ஆத்மி தொண்டர் போல் தொடர்ந்து பணியாற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார். 2022-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 5 பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர் உமேஷ் மக்வானா ஆவார். இடைத்தேர்தலில் கோபால் இட்டாலியா வெற்றி பெற்ற 3 நாட்களுக்குள், உமேஷ் மக்வானா திடீரென கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து