முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரியில் 31. 24 டி.எம்.சி. நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      இந்தியா
Cauvery 2023 06 07

புதுடெல்லி, தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. 

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 117வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர் வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.  தமிழக அரசு சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி வழியாக தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு 31.24 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் கர்நாடகா அரசு சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஜூன் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை விட கூடுதலாகவே கர்நாடகா காவிரியில் திறந்து விட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக ஜூன் மாதம் தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் கர்நாடகா அதைவிட கூடுதலாக 16 டி.எம்.சி க்கும் அதிகமான தண்ணீரை திறந்து விட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவில் பெய்த தொடர் மழை காரணமாக உபரி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டதாகவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நீர் திறக்கப்பட வேண்டும் என தமிழக அரசு தரப்பு தெரிவித்தது.

இதனையடுத்து தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா தடையின்றி வழங்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. நேற்று டெல்லியில் காணொளி காட்சி மூலம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்றுகாவிரி நீர் மேலாண்மை ஆணைய 41 கூட்டம் கூட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து