முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

28 மணி நேரம் பயணம் வெற்றி: சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்த இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      உலகம்
Nasa-2024-10-15

Source: provided

நியூயார்க்: டிராகன் விண்கலம் வாயிலாக 28 மணி நேரம் விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழுவினர் நேற்று (ஜூன் 26) வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தார். இதன் வாயிலாக அங்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷூவுக்கு கிடைத்தது.

நம் விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் அழைத்து வரும் 'ககன்யான்' திட்டத்தை 2027ல் செயல்படுத்த திட்டமிட்டு, பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம், விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டது. 'ஆக்சியம் - 4' திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா, 39, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோரை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் பகல் 12:01 மணிக்கு, நான்கு பேரும் விண்வெளிக்கு புறப்பட்டனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், நாசாவுக்கு சொந்தமான கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, தொழிலதிபர் எலான் மஸ்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் - 9' ராக்கெட் வாயிலாக, இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட நான்கு பேரையும் சுமந்து, 'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்' விண்கலம் புறப்பட்டது. இதையடுத்து, விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷூ சுக்லா பெற்றார்.

இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. அங்கு கால் வைத்ததும், சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. அங்கு 14 நாட்கள் தங்கியிருந்து, ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர்.

மொத்தம் 60 ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதில், ஏழு ஆராய்ச்சிகள் இந்தியாவுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளியில் பிராண வாயு, நீர் இல்லாத பகுதியில் செடிகள் வளர்ச்சி உள்ளிட்ட ஆய்வில் சுக்லா ஈடுபடுவார். மேலும், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து, நம் நாட்டின் மிக முக்கிய பிரமுகர் ஒருவருடன் அவர் பேசுவார் எனவும் கூறப்படுகிறது. விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு செல்லும் முதல் வீரர் என்ற பெருமையும் சுபான்ஷூ சுக்லாவுக்கு கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து