முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியர்கள் என் இதயத்தில் உள்ளனர்: விண்கலத்தில் இருந்து சுபான்சு சுக்லா பேச்சு

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      இந்தியா
Subhanshu-Shukla-2025-06-26

புதுடில்லி, ஒவ்வொரு இந்தியரும் தன் இதயத்தில் இருப்பதாக சுபான்ஷு சுக்லா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லை எட்டிப்பிடிக்கும் முயற்சியில் உள்ளது. வருகிற 2027-ம் ஆண்டில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது. அவர்களுக்காக சிறப்பு பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தின் முன்னோட்டமாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு இந்திய வீரரை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது. அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்த இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலைய ஆராய்ச்சி குழுவுடன் செல்ல இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லாவை தேர்வு செய்தது. இதன்படி, நேற்று முன்தினம் இந்திய நேரப்படி பகல் 12.01 மணிக்கு ஏவப்பட்ட பால்கன்-9 ராக்கெட் மூலம் சுபான்சு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையம் புறப்பட்டார். அவருடன் மேலும் 3 விண்வெளி வீரர்களும் சென்றனர்.  

இந்த நிலையில் விண்கலத்தில் இருந்தபடி, சுபான்சு சுக்லா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: - வணக்கம்! மிகப்பெருமையாக உணர்கிறேன். மிகச்சிறிய அடிகள் மூலம் மிகப்பெரிய இலக்கை அடைய போகிறோம். ஒவ்வொரு இந்தியரும் என் இதயத்தில் இருக்கிறார்கள். எனது அனுபவங்களை பகிர ஆர்வத்துடன் உள்ளேன். ஒரு குழந்தையை போல உணர்கிறேன். விண்வெளியில் எப்படி நடப்பது, சாப்பிடுவது என்பதை கற்று வருகிறேன்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து