Idhayam Matrimony

சென்னையில் மினி மாரத்தான் போட்டி: அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      தமிழகம்
Periyakaruppan 2023 07 31

Source: provided

சென்னை: சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், சென்னை மேயர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி (06-07-2025) நேற்றுகாலை 05.30 மணியளலில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது, இப்போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

'சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம்' மினி மாரத்தானில் பங்கேற்றவர்கள், சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கி வெற்றி போர் நினைவுச்சின்னம், அண்ணா சதுக்கம், விவேகானந்தர் இல்லம் வரை சென்று மீண்டும் அதே பாதையில் தீவுத்திடல் வந்தடைந்தனர், இதில் 18 வயது முதல் 40 வயது உடையவர்கள், மேலும் 40 வயது முதல் அதற்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவாக 2000 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டானர். ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு  அமைச்சர் மா. சுப்பிரமணியன் பரிசு வழங்கி பாராட்டினார். பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு  அமைச்சர் பி.கே.சேகர்பாபு காசோலை மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார்.  

இந்நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலாளர், கூட்டுறவு உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை சத்யபிரதசாகு, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் க.நந்தக்குமார், கூடுதல் பதிவாளர் (நுகர்பு பணிகள்) ச.பா.அம்ரித், மேயர் பிரியாமற்றும் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்கள், துணைப்பதிவாளர்கள், உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து