முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதி அறிக்கைக்கு பிறகே விமான விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும்: ராம் மோகன்

சனிக்கிழமை, 12 ஜூலை 2025      இந்தியா
ahmedabad-plane-crash-4

புதுடெல்லி,  இறுதி அறிக்கைக்கு பிறகே, ஏர் இந்தியா விமான விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

 குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த ஜூன் 12-ம் தேதி விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில் மருத்துவ மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் விமான விபத்துக்கான புலனாய்வு அமைப்பு (ஏ.ஏ.ஐ.பி.) தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், "விமானத்தின் 2 இன்ஜின்களுக்கும் எரிபொருள் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதால்   என்ஜினுக்கு எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. எனினும், எரிபொருள் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் சுவிட்சுகள் எவ்வாறு ‘ரன்’ என்ற நிலையில் இருந்து கட் ஆப் நிலைக்கு மாறின என்பது குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த விகாரங்கள் தொடர்பாக விசாகப்பட்டிணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “விசாரணை அறிக்கையில் ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகள் மட்டுமே உள்ளன. இவ்விஷயத்தில் அவசரப்பட்டு நாம் எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது.   இறுதி அறிக்கை விரைவில் வரும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்போது, விபத்து தொடர்பாக சில முடிவுகளுக்கு எங்களால் வர முடியும். விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களைப் பொறுத்தவரை, உலகின் சிறந்த விமானிகளும் விமானப் பணியாளர்களும் எங்களிடம் இருப்பதாக நான் உண்மையாகவே நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து