முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சார்-பதிவாளர் உள்ளிட்ட 645 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, குரூப் 2-ஓ தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2025      தமிழகம்
TNPSC 2024 08 13

Source: provided

சென்னை : சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2(ஏ) தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. குரூப் 2 (ஏ)-வுக்கான தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘டி.என்.பி.எஸ்.சி. வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “சார்-பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2(ஏ) தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும். தேர்வுக்கு ஆகஸ்ட் 13-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை யுபிஐ வசதி மூலமாக செலுத்தலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது ஆகும்.

அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் காலிப் பணியிடங்கள் பெறப்படு்ம பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், தேர்வர்களின் நலன் கருதி குரூப்-2 (ஏ) முதன்மைத் தேர்வு முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

முதல்நிலைத் தேர்வை பொறுத்தவரையில் குரூப்-2, குரூப்-2 (ஏ) இரு தேர்வுகளுக்கும் பொதுவான தேர்வுதான். பொது அறிவு மற்றும் கணிதம் தொடர்பான 100 கேள்விகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பாடத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். இதில் வெற்றிபெறுவோர் அடுத்த கட்ட தேர்வான முதன்மைத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

முதன்மைத்தேர்வானது குரூப்-2 பணிகளுக்கும், குரூப்-2(ஏ) பணிகளுக்கும் தனித்தனியே நடத்தப்படும். குரூப்-2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வில், பொது அறிவு பகுதியில் 300 மதிப்பெண்களுக்கு விரிவாக விடையளிக்க வேண்டும். குரூப்-2 (ஏ) பணிகளுக்கு பொது அறிவு பகுதியில் 150 கேள்விகள், கணிதம் பகுதியில் 50 கேள்விகள் என அப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 300.

இது கணினி வழியில் நடத்தப்படும். முன்பு பொது அறிவு பகுதியில் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தொடர்பான 60 வினாக்கள் இடம்பெற்றிருந்தது. தற்போது புதிய தேர்வுமுறையில் மொழிப் பாடம் தொடர்பான அந்த பகுதி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், விரிவாக பதில் எழுதக்கூடிய கட்டாய தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்வு குரூப்-2, குரூப் 2-(ஏ) இரு முதன்மைத் தேர்விலும் பொது தேர்வாக இடம்பெறும். இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண் ரேங்க் பட்டியல் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து