முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமும், நீதியும் விமர்சனம்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      சினிமா
Law-and-Justice 2025-07-21

Source: provided

சாதாரண நோட்டரி புகார்களை டைப் செய்யும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்க, அதை சரவணன் நிராகரிக்கிறார்.  அப்போது கடத்தப்பட்ட தன் மகளுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழக்கிறார். அவருக்கு நீதியை பெற்று தர வேண்டும் என்ற முடிவுக்கு வரும் சரவணன், அந்த சம்பவம் தொடர்பாக பொதுநலன் வழக்கு தொடர்கிறார். விசாரனையில் அந்த பெண் 20 வருடங்களுக்கு முன்பே காணாமல் போனதும், தீக்குளித்து உயிரிழந்த அவரது தந்தை நீண்ட நாட்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரிய வருகிறது. இப்படி அடுத்தடுத்த எப்பிசோட்கள் பல திருப்பங்களோடு பயணிக்கிறது சட்டமும் நீதியும் என்ற இணையத் தொடர். சரவணன் சாதாரண வழக்கறிஞர் வேடத்தை மிக கச்சிதமாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார். சரவணனின் உதவியாளராக நடித்திருக்கும் நம்ரிதா, தைரியம், துணிவு மிக்க பெண்ணாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். அருள் டி.சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். தொடரை இயக்கியிருக்கும் பாலாஜி செல்வராஜ், கடத்தப்பட்ட பெண் யார் என்ற ஆவலையும் தூண்டி, அவளுக்கு என்ன நடந்திருக்கும், என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி, 7 எப்பிசோட்களையும் கண்கள் இமைக்காமல் பார்க்க வைத்திருக்கிறார்.  மொத்தத்தில், ‘சட்டமும் நீதியும்’ அதிரடி சுவாரஸ்யம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து