முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரெண்டிங் திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      சினிமா
Trending 2025-07-21

Source: provided

யூடியுப் சேனல் ஒன்றை கலையரசன் - பிரியாலயா தம்பதி நடத்தி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு நாள் அவர்களது யூடியுப் சேனல் டெலிட் ஆக, தொலைபேசி மூலம் ஒரு மர்ம நபர் அவர்களை தொடர்பு கொள்கிறார். தாங்கள் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துவதாகவும், அதில் வெற்றி பெற்றால் கோடியில் பணம் கிடைக்கும் என்றும் 7 நாட்கள் விளையாட வேண்டும் என்றும் டாஸ்க் கொடுக்கிறான். இந்த போட்டியால் அவர்களது வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகள் உருவெடுக்கிறது என்பதை சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்களின் மனசாட்சியை உலுக்கும் வகையில் சொல்வது தான் ‘டிரெண்டிங்’. கலையரசன் பிரியாலயா இருவரும் முழுப்படத்தையும் தங்களது இயல்பான நடிப்பு மூலம் சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்.  நடனம் மூலம் அறியப்பட்ட நடிகை பிரியாலயா, இந்த படத்தில் சிறந்த நடிகையாக முத்திரை பதித்துள்ளார். யூடியுப் நடத்துபவர்கள் தங்களது அன்றாட வாழ்வியல் சம்பவங்களை பகிர்ந்துக் கொள்வதோடு, சில அந்தரங்க விசயங்களையும் பகிர்ந்துக் கொள்ளும் அவலங்களும் நடந்து வருகிறது. அத்தகைய மனிதர்களுக்கு அறிவுரையாக மட்டும் இன்றி எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவராஜ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து