முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      தமிழகம்
CM 2024-12-16

Source: provided

சென்னை : கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார். ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் திருவனந்தபுரம் மருத்துவமனையில் உள்ள அச்சுதானந்தன் உடல் நலன் குறித்து முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அப்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டது.கடந்த சில மணி நேரங்களாக அவரது ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் அச்சுதானந்தன் நேற்று மாலை காலமானார்.அச்சுதானந்தன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில், கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன்; கொள்கை ரீதியான அரசியல், பொது சேவை உணர்வை கொண்ட பெருந்தலைவர் அவர். தமிழ்நாட்டு மக்கள் சார்பாக செவ்வணக்கம். அவரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கும், சிபிஐஎம் பணியாளர்களுக்கும், கேரள மக்களுக்கும் எனது இரங்கல்.. எனது சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் அமைச்சர் ரகுபதி அஞ்சலி செலுத்துவார் என அதில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து