Idhayam Matrimony

ஹாக்கி: ரயில்வே சாம்பியன்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      விளையாட்டு
Hockey 2023 04 17

Source: provided

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ரயில்வே-இந்திய கடற்படை அணிகள் மோதின. 

இதில் ரயில்வே அணி 3-1 என்ற கோல் கணக்கில் கடற்படை அணியை வீழ்த்தியது. ரயில்வே தரப்பில் ஷிவம் ஆனந்த், பங்கஜ் ரவாத், சய்யத் நியாஸ் ஆகியோா் கோலடித்தனா். கடற்படை தரப்பில் அகிப் ரஹீம் கோலடித்தாா். இறுதி ஆட்ட நாயகனாக ரயில்வே வீரா் குா்சாஹிப்ஜித் சிங் தோ்வு பெற்றாா்.

____________________________________________________________________________________________________

குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நிதிஷ்குமாரும், 4-வது போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங்கும் விலகியதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயத்தால் அவதியுறும் நிலையில் 4-வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் களம் இறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணி; சுப்மன் கில், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ்

____________________________________________________________________________________________________

செஸ்: அரையிறுதியில் ஹம்பி

பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் முறையாக கொனேரு ஹம்பி, வைஷாலி , திவ்யா, ஹரிகா ஆகிய 4 இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி காலிறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார். 53-வது நகர்த்தலின் போது யுக்சின் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

இதனால் ஹம்பி வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் விளையாடிய 2-வது காலிறுதி போட்டி டிராவில் முடிந்தது. இதன் காரணமாக மகளிர் செஸ் உலக கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி பெற்றார்.

____________________________________________________________________________________________________

இங்கி.யில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்

அடுத்த 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து நடத்துகிறது. ஐ.சி.சி.யின் வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 2027, 2029 மற்றும் 2031-ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்பட்டது.

சமீபத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் திறனை அங்கீகரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தகது.

____________________________________________________________________________________________________

இந்திய ஏ அணி படுதோல்வி

இந்திய 'ஏ' ஆக்கி அணி, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் நெதர்லாந்தின் ஜன்ட்ஹோவன் நகரில் நேற்று முன்தினம் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நெதர்லாந்துடன் மோதியது.

இதில் நெதர்லாந்து அணி அடுத்தடுத்து கோல்களை போட்டு தாக்கியது. இந்திய அணியால் 2 கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. முடிவில் இந்திய ஏ அணி 2-8 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. இந்தியா தரப்பில் ராஜீந்தர் சிங் மற்றும் செல்வம் கார்த்தி தலா ஒரு கோல் அடித்தனர். இதன் மூலம் இந்திய ஏ ஆக்கி ஆணி தோல்வியோடு இந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து