Idhayam Matrimony

இங்கிலாந்து மண்ணில் வரலாறு படைக்க உள்ள ஜஸ்பிரித் பும்ரா

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      விளையாட்டு
bumra

Source: provided

மான்செஸ்டர் : இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆசிய பந்துவீச்சாளராக பும்ரா சாதனை படைக்க உள்ளார்.

மான்செஸ்டரில்...

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.

நெருக்கடி...

தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே இந்த மிக முக்கியான போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? என்பதில் பெரிய கேள்வி நிலவுகிறது.

மிகப்பெரிய விவாதம்... 

ஏனெனில் இந்த தொடரின் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதல் மற்றும் 3-வது போட்டிகளில் அவர் விளையாடி விட்டதால் மீதமுள்ள 2 போட்டிகளில் எந்த ஒன்றில் விளையாடுவார் என்பது மிகப்பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் பும்ரா விளையாட வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர்.

சாதனை...

ஒருவேளை பும்ரா இந்த போட்டியில் களமிறங்கி 5 விக்கெட்டுகள் வீழ்த்தும் பட்சத்தில் இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆசிய பந்துவீச்சாளராக சாதனை படைப்பார். இங்கிலாந்தில் இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 49 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

வரலாறு...

மறுபுறம் இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆசிய பவுலராக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் (53 விக்கெட்டுகள்) உள்ளார். பும்ரா இந்த தொடரில் இன்னும் 5 விக்கெட்டுகள் கைப்பற்றும் பட்சத்தில் வாசிம் அக்ரமை தாண்டி இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆசிய பவுலராக வரலாறு படைப்பார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து