Idhayam Matrimony

மாணவிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

மதுரை : விளையாட்டு போட்டிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட மாணவிக்கு பயிற்சி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த வழக்கு விருதுநகர் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று அந்த ஆசிரியருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி ஆசிரியர் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை ஏற்கனவே விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆசிரியரின் தண்டனையை உறுதி செய்து. அவரது மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி ராமகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. பள்ளி கல்வி பயிலக்கூடிய மாணவிகள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள கூடிய சிறப்பு பாதுகாப்பு சட்டம் ஏற்றமுடியுமா என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.  அந்த வழக்கு நேற்று நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன்பாக விசாரணைக்கு வந்திருந்தது.

விசாரணையின் போது தமிழ்நாடு குற்றவியல் வழக்கறிஞர் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். அந்த அறிக்கையில் தான் தமிழக அரசு தற்போது விளையாட்டு துறையில் கலந்து கொள்ளகூடிய மாணவிகள் மற்றும் இளம்பெண்களின் பாதுகாப்புகளை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வழிகாட்டுதல்களை ஏற்கனவே தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வருகின்ற சட்டமன்ற கூட்ட தொடரின் போது சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்றுவது சம்மந்தமான அறிக்கை தாக்கல் செய்யப்படுவது. அந்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். 

இதனை ஏற்ற நீதிபதிகள், தமிழக அரசுக்கு  பாராட்டுகளை தெரிவித்ததுடன்,  இந்த சட்டம் இயற்றப்பட்டதற்கான அறிக்கையின் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து