முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி: முதல்வர்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, தனது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும்  முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. மு.க.முத்து மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் மு.க.முத்து உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்பட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், தனது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- எனது அண்ணன்   மு.க.முத்து மறைவுக்கு நேரில் வந்து எங்களது துயரில் பங்கெடுத்து ஆறுதல் சொன்ன சகோதரர் செல்வப்பெருந்தகை, தோழர் கே.பாலகிருஷ்ணன், சகோதரர் தொல்.திருமாவளவன், பேராசிரியர் காதர் மொகிதீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, வசீகரன், சகோதரர் துரை வைகோ, சகோதரி தமிழிசை சவுந்தரராஜன், கரு.நாகராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,

சத்யராஜ், விக்ரம் உள்ளிட்ட கலையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் - ஊடகவியலாளர்கள், நேரில் வர முடியாத சூழலில் தொலைபேசி வாயிலாக இரங்கலைப் பகிர்ந்துகொண்ட சகோதரர் ராகுல் காந்தி, ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் மற்றும் எனது இல்லம் தேடி வந்து ஆறுதல் தெரிவித்த சீமான் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து