முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க. 2-வது மாநில மாநாடு: 20-க்கும் அதிகமான கேள்விகளை முன்வைக்கும் மதுரை காவல்துறை

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      தமிழகம்
Vijay 2024-09-09

மதுரை, தமிழக வெற்றிக்கழகம் சார்வில் மதுரையில் நடைபெறும் 2-வது மாநில மாநாடுக்கு காவல் துறை சார்பில் 20-க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் கடந்தாண்டு அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தற்போது 2-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கோரியும், காவல்துறை பாதுகாப்புக் கேட்டும் த.வெ.க. சார்பில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவையடுத்து, த.வெ.க.வின் மதுரை மாநாடு தொடங்கும் நேரம், முடியும் நேரம், மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் உரிமையாளர் யார்? மாநாட்டு மேடையின் அளவு என்ன? என்பது உள்ளிட்ட ஏராளமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி மாநாடைப் போலவே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள காவல்துறை, மாநாட்டில் பங்கேற்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கையும் தர அறிவுறுத்தியிருக்கிறது.

அந்த வகையில், த.வெ.க. கட்சியிடம், 20க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்து விளக்கமளிக்கவும், உரிய விவரங்களைத் தரவும்ட மதுரை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழகத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. ஒரு பக்கம் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி, மறுபக்கம் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம், தேமுதிக கட்சிகள் இதுவரை தனித்தனியே களமிறங்குமா, கூட்டணி அமைக்குமா என்று உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து