Idhayam Matrimony

அச்சுதானந்தன் உடலுக்கு பினராயி விஜயன் அஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      இந்தியா
Achuthanandan -2025-07-22

திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடலுக்கு பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். 

கேரள முன்னாள் முதல்வர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான வி.எஸ். அச்சுதானந்தன் நேற்று  முன்தினம் காலமானார். அவருக்கு வயது 101. வயது முதிர்வால் 2019-ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்த அவருக்கு, கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  ஆனால் சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் பிற்பகல் 3.20 மணிக்கு காலமானார்.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக தலைமை செயலக தர்பார் அரங்கில் வைக்கப்பட்டு இருந்தது..  இன்று (புதன்கிழமை) காலையில் ஆலப்புழை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதையுடன் ஆலப்புழை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

மறைந்த வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு வசுமதி என்ற மனைவியும், அருண்குமார் என்ற மகனும், வி.வி. ஆஷா என்ற மகளும் உள்ளனர். அச்சுதானந்தனின் மறைவையொட்டி கேரளாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  மேலும் 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் எம்.பி. மற்றும் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான பிருந்தா காரத் மற்றும் பிற தலைவர்கள் அவருடைய உடலுக்கு நேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து