Idhayam Matrimony

பத்ரா மேல் அணை திட்டத்திற்காக மத்திய அரசு நிதி தரவில்லை: சித்தராமையா குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      இந்தியா
Siddaramaiah 2023 04 16

துமகூரு, பத்ரா மேல் அணை திட்டத்திற்காக மத்திய அரசு தருவதாக கூறிய ரூ 5300 கோடியை வழங்கவில்லை என சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

துமகூரு மாவட்டத்தில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அவற்றில் துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கு துங்க பத்ரா ஆற்று குடிநீர் வழங்கும் திட்டமும் ஒன்றாகும். 

இதற்காக பாவகடாவில் உள்ள கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:- துமகூரு மாவட்டத்தில் ரூ.15 ஆயிரம் கோடிக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. பாவகடா தாலுகா மக்களின் நீண்ட கால கனவான குடிநீர் திட்டம் முக்கியமானதாகும். இதற்கு முன்பு இந்த குடிநீர் திட்டத்திற்கு நான் முதல்வர்யாக இருந்த போது அடிக்கல் நாட்டினேன். தற்போது இந்த திட்டத்தை நானே தொடங்கி வைத்துள்ளேன். இதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை.

பத்ரா குடிநீர் திட்டம் மூலமாக 180 கிராம மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பாவகடா டவுன் டவுன் பகுதிக்கும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பத்ரா மேல் அணை திட்டத்திற்காக மத்திய அரசு தருவதாக கூறிய ரூ 5300 கோடியை வழங்கவில்லை. ஆனாலும் கர்நாடக அரசு நிதியை ஒதுக்கி தும்கூர் மாவட்டத்திற்கு தேவையான நீர்ப்பாசன திட்டங்களை செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து