Idhayam Matrimony

வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      இந்தியா
Parliment-2025-07-22

புதுடெல்லி, பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 2ம் நாளான நேற்று, வழக்கம்போல் இரு அவைகளும் காலை 11 மணிக்குக் கூடின. அப்போது, இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர், இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தின் பின்னணி பற்றியும், பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு என்ற பெயரிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதையடுத்து, வெளியே வந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மகர் துவார் எனும் பாராளுமன்ற வாயிலில் கூடி பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், ஜோதிமணி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ. ராசா, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மிசா பாரதி, மனோஜ் ஜா உள்ளிட்ட ஏராளமான எம்.பி.க்கள் கைகளில் எஸ்.ஐ.ஆர்.க்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து