முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைனில் வேட்பு மனுத்தாக்கல்: தேர்தல் கமிஷன் நடவடிக்கை

வியாழக்கிழமை, 24 ஜூலை 2025      இந்தியா
Election-Commision 2023-04-20

Source: provided

புதுடில்லி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆன்லைனில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தல் கமிஷன் சுவிதா என்ற இணையதளத்தை ஏற்கனவே பயன்பாட்டில் வைத்துள்ளது. இந்த, இணையதளத்தில், வேட்பாளர்கள் தங்களது பெயர், செல்போன் எண் கொடுத்து லாகின் செய்து கொள்ள வேண்டும். பின்னர் தனது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால் நமது முழு விவரங்கள் அனைத்தும் தானாக பூர்த்தி ஆகிவிடும். இதையடுத்து, வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியை தேர்வு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். சொத்து மற்றும் வழக்கு போன்ற அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யலாம். தேவையான ஆவணங்களையும் இணைக்கலாம்.

இந்த இணையதளத்தில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் போது, தேர்தல் பிரசாரங்களுக்கு அனுமதிகள், பாதுகாப்பு கோரிக்கைகள், வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்யலாம். இது குறித்து மத்திய தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள், பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்க அனைத்தையும் முற்றிலும் டிஜிட்டல் முறையில் மாற்றி விட்டது. இனி வேட்பாளர்கள் ஆன்லைன் முறையிலேயே வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இந்த நடைமுறை வரும் நவம்பர் மாதம் பீஹார் தேர்தலில் கொண்டுவரப்படும்.

அதில் ஏற்படும் தாக்கத்தை பொறுத்து அடுத்த ஆண்டு தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களிலும் முழு அளவில் செயல்படுத்தப்படும். இந்த டிஜிட்டல் முறை விண்ணப்பம் வேட்பாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து