முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர்கள் சிறப்பு திருத்த விவகாரம்: நெருப்புடன் விளையாட வேண்டாம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை : பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கத்திற்கு கடும் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2025      தமிழகம்
CM 2024-12-10

Source: provided

சென்னை : வாக்காளர்கள் சிறப்பு திருத்தம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக உள்ளது என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நெருப்புடன் விளையாடதீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பீகாரில் 65 லட்சம்  வாக்காளர்களை நீக்கியதற்கு முதல்வர் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தேர்தல் ஆணையம்....

பீகாரில் உள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இறப்பு, இடம் பெயர்ந்தவர்கள், மற்றும் இரு இடங்களில் பதிவு என மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிடப்படும் என்றும், அதில் தகுதியுள்ள அனைவரும் சேர்க்கப்படுவார்கள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முதல்வர் கண்டனம்... 

இந்த நிலையில், வாக்காளர்களை நீக்கியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; "சிறப்பு தீவிர திருத்தம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பின்தங்கிய மற்றும் கருத்து வேறுபாடு கொண்ட சமூகங்களின் வாக்காளர்களை அமைதியாக அழிக்கவும், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது சீர்திருத்தம் பற்றியது அல்ல. இது விளைவுகளைப் பற்றியது. இது ஒரு மாநிலத்தின் பிரச்சனை அல்ல, குடியரசின் அடித்தளம் பற்றியது.

எங்களை நீக்க முயற்சி... 

எங்களை தோற்கடிக்க முடியாவிட்டால், நீங்கள் எங்களை நீக்க முயற்சிக்கிறீர்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள். நமது ஜனநாயகத்திற்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் உறுதியான எதிர்ப்பை எதிர்கொள்ளும். தமிழ்நாடு முழு பலத்துடன் குரல் எழுப்பும். இந்த அநீதியை நம்மிடம் உள்ள அனைத்து ஜனநாயக ஆயுதங்களையும் பயன்படுத்தி எதிர்த்துப் போராடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து