முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - மாலத்தீவுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2025      உலகம்
Jaishankar 2023 04 09

Source: provided

மாலி : பிரதமர் மோடி , மாலத்தீவு அதிபர் முகமது முய்க முன்னிலையில் இந்தியா-மாலத்தீவுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு மாலத்தீவு புறப்பட்டார். அவர் இன்று தனி விமானம் மூலம் மாலத்தீவு சென்றடைந்தார். 2 நாட்கள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.

இதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். முன்னதாக மாலத்தீவின் மாலேவில் உள்ள குடியரசு சதுக்கத்தில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இந்திய அரசின் பிற அதிகாரிகளை முகமது முய்சு சந்திக்கிறார். அவர்களை முகமது முய்சுவிற்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி , மாலத்தீவு அதிபர் முகமது முய்க முன்னிலையில் இந்தியா-மாலத்தீவுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா நிதியுதவியுடன் மாலத்தீவு ஹுல்ஹு மாலேயில் 3,300 வீடுகள், அட்டு நகரில் சாலைகள் மற்றும் வடிகால் திட்டம் தொடக்கம், இந்தியா-மாலத்தீவு இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை தொடங்க இருநாடுகளும் சம்மதம், இந்திய அரசு மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 72 கனரக வாகனங்களை வழங்குதல் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து  இன்று நடைபெறும் மாலத்தீவின் 60-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதையடுத்து, மாலத்தீவு பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி இன்று மாலை  நாடு திரும்புகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து