முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2025      தமிழகம்
Jail 2025-03-19

Source: provided

சூலூர்பேட்டை : திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சூலூர்பேட்டையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே கடந்த 12ஆம் தேதி வட மாநில இளைஞரால் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிப்படைகள் 30 ஆக அதிகரிக்கப்பட்டு, குற்றவாளி தேடப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து, ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், ரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் அதே உடையுடன் நின்றிருந்த நபரை காவல்துறையினர் அடையாளம் கண்டு கைது செய்திருப்பதாகவும், அவரது புகைப்படத்தை சிறுமியிடம் காட்டி அவர்தான் குற்றவாளியா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, சம்பவம் நடந்தபோது, அப்பகுதியிலிருந்த சி.சி.டிவி.யில், ஒருவர், பள்ளிச் சிறுமியை கடத்திச் செல்வது பதிவாகியிருந்தது. மேலும் ஒரு சி.சி.டிவி.யில் அவரது முகம் தெளிவாகப் பதிவாகியிருந்த நிலையில், அவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும், அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவித்து, காவல்துறையினர் குற்றவாளியை தேடி வந்தனர்.

ஏற்கனவே, சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். அவர்களது புகைப்படங்களும் சிறுமியிடம் காண்பிக்கப்பட்டு, அதனை அவர் மறுத்திருந்த நிலையில் தற்போது பிடிபட்டவரை சிறுமி அடையாளம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து