முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட்: ஜோ ரூட் வரலாற்று சாதனை

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2025      உலகம்
Joe-Rudd 2024-10-08

Source: provided

மான்செஸ்டர் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த 3-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.

4-வது டெஸ்ட்...

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில்  தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

சிறப்பான தொடக்கம்...

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராவ்லி - பென் டக்கட் சிறப்பாக ஆடினர். வலுவான அஸ்திவாரம் போட்ட இவர்கள் 166 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். ஜாக் கிராவ்லி 84 ரன்களில், ஜடேஜாவின் சுழலில் கேட்ச் ஆனார். பென் டக்கட் 94 ரன்களில் (100 பந்து, 13 பவுண்டரி) அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அன்ஷூல் கம்போஜியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜூரெலிடம் சிக்கினார். இது அவரது முதல் சர்வதேச விக்கெட்டாக அமைந்தது. 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் அடித்திருந்தது.  

3-வது வீரர்...

தொடர்ந்து ஜோ ரூட் மற்றும் போப் பேட்டிங் செய்தனர். இதில் ஜோ ரூட் 31 ரன்கள் அடித்திருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை 13,290 ஆக உயர்ந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த 3-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்:

1. சச்சின் தெண்டுல்கர் - 15,921 ரன்கள்

2. ரிக்கி பாண்டிங் - 13,378 ரன்கள்

3. ஜோ ரூட் - 13,290* ரன்கள்

4. ஜாக் காலிஸ் - 13,289 ரன்கள்

5. ராகுல் டிராவிட் - 13,288 ரன்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து