முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடீஸ்வரர் பட்டியலில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2025      உலகம்
Sundar-Pichai 2024-05-02

Source: provided

நியூயார்க் : கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை முன்னணி கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்தார்.

கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்து வருபவர் சுந்தர் பிச்சை. தமிழ்நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறிய அவர் கூகுளின் ஆண்ட்ராய்டு பிரிவை வழிநடத்தினார். அந்த நிறுவன வளர்ச்சியில் இவரது பங்கு மிக சிறப்பானது. இவரது திறமையால் 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். 

இந்த பதவிக்கு வந்து தற்போது அவர் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த நிறுவனத்தில் மிக நீண்ட காலம் உயர் பதவியை சுந்தர் பிச்சை வகித்து வருகிறார். சுந்தர் பிச்சை பொறுப்பேற்றது முதல் தற்போது வரை கூகுள் நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தது. 2023-ம் ஆண்டு முதல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 86.5 லட்சம் கோடி) அதிகமான உள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறையில் கூகுள் அடைந்த முன்னேற்றம் நிறுவனத்தின் பங்குகளை அசுர வேகத்தில் உயர்த்தியது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குகள் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கும் 120 சதவீதத்துக்கும் மேலான வருமானத்தை இது வழங்கி உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் இந்த பிரமாண்ட வளர்ச்சி சுந்தர் பிச்சையை பில்லியனர் அந்தஸ்துக்கு உயர்த்தி உள்ளது. ப்ளூம் பெர்க் அறிக்கையின் படி சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் 1.1 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.9 ஆயிரம் கோடி) டாலராக உயர்ந்து உள்ளது. மேலும் போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலும் சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ. 1.2 பில்லியனாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய கோடீசுவரர் பட்டியில் சுந்தர் பிச்சை இடம் பிடித்து உள்ளார். ஒரு நிறுவனத்தின் நிறுவனராக இல்லாத தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் பில்லியனர் ஆவது என்பது மிகவும் அரிதான சாதனையாகும். இந்த சாதனையை சுந்தர் பிச்சை நிகழ்த்தி தமிழரின் பெருமையை உலகெங்கும் நிலை நாட்டி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து