முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.சி.பி. வீரர் யஷ் தயாள் மீது 17 வயது சிறுமி பாலியல் புகார்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2025      விளையாட்டு
Jail 2024-10-04

Source: provided

 ஜெய்ப்பூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் யஷ் தயாள் மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகாரளித்துள்ளார்.

ஆர்.சி.பி. வீரர்...

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதார் காவல் நிலையத்தில் ஆர்.சி.பி. அணியின் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் மீது 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் மீது மீண்டும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாக உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் யஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் அனைவரையும் உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஐ.பி.எல். தொடரின் போது... 

காஜியாபாத் வழக்கில் தயாளின் போலீஸ் காவலுக்கு அலாகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்தச் சம்பவமே ஓயாத நிலையில், கடந்த ஐ.பி.எல். தொடரின் போது 17 வயது சிறுமியை பாலியல் ரீதியில் யஷ் தயாள் பயன்படுத்திக் கொண்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் - பெங்களூரு போட்டியின் போது அந்தச் சிறுமியைத் தொடர்பு கொண்டு அருகில் அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அவரிடம் தவறாக நடந்துகொண்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், யஷ் தயாள் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

கேள்விக்குறி...

ஏற்கனவே, காஜியாபாத் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் யஷ் தயாள் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை எதிர்கொள்ளக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தப் புகாரில் ஆதரத்துடன் நிரூபிக்கப்பட்டால் கூடுதலாக தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், யஷ் தயாளின் கிரிக்கெட் வாழ்க்கை எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து