முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்சிலோனா லெஜெண்ட் ஜவியை நிராகரித்த இந்திய கால்பந்து கூட்டமைப்பு

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2025      விளையாட்டு
Women 2023-12-10

Source: provided

மும்பை : இந்திய கால்பந்து அணிக்கு பயிற்சியளிக்க விரும்பும் பார்சிலோனா லெஜெண்ட் ஜவிக்கு அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

133-ஆவது இடம்...

இந்திய ஆடவர் கால்பந்து அணி மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய அணி ஃபிஃபா தரவரிசையில் 133-ஆவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளது. இந்தியாவின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ் சமீபத்தில் வெளியேறினார். அவருடைய ஓராண்டு காலத்தில் 8 போட்டிகளில் 1-இல் மட்டுமே வென்றிருந்தது.

ஜவி விண்ணப்பம்...

அடுத்ததாக யாரை பயிற்சியாளராக நியமிக்கலாம் என்ற தேர்வுகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்தப் பதவிக்கு 8 முறை லா லீகா வென்ற பார்சிலோனா லெஜெண்ட் ஜவி விண்ணபித்துள்ளார். சமீபத்தில் ஜெவி ஒரு பேட்டியில், “நான் அதிகமாக லா லீகா போட்டிகளையும் பிரீமியர் லீக்கையும் பின் தொடர்வேன். பிரெஞ்சு போட்டிகளை பார்க்காவிட்டாலும் எப்போதாவது பி.எஸ்.ஜி., மார்செல்லி போட்டிகளைப் பார்ப்பேன். 

ஐ.எஸ்.எல். போட்டிகள்...

இத்தாலியில் கோமோ. ஏனெனில் அங்கு என் நண்பர் இருப்பார்கள். சௌதி, கத்தாரிலும் நண்பர்கள் நல்ல நண்பர்கள் இருப்பதால் அதையும் அடிக்கடி பார்ப்பேன். எனக்கு கால்பந்து மிகவும் பிடிக்கும். அதனால், அதிகமாக பார்க்கிறேன். பனாமாவையும் பார்க்கிறேன். சில நேரங்களில் ஐ.எஸ்.எல். போட்டிகளைப் பார்க்கிறேன், ஏனெனில் அங்குதான் ஸ்பானிஷ் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள்” என்றார்.

ரசிகர்கள் சோகம்...

பார்சிலோனாவில் ஜவி 8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 81 கோடி) சம்பளமாக பெற்றுவந்தார். கடந்த 2023/24 சீசனில் அவர் அந்த அணியை விட்டு விலகினார். இந்தப் பதவிக்கு அவருக்குக் கூடுதல் சம்பளம் தரப்பட வேண்டுமென இந்திய கால்பந்து கூட்டமைப்பு மறுத்துவிட்டதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜவியை ஏற்க இந்திய கூட்டமைப்பு ஏற்க மறுத்ததால் இந்திய கால்பந்து ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். யாராவது லெஜெண்ட்டுகள் வந்தால் மட்டுமே மீண்டும் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும் என கால்பந்து ரசிகர்கள் ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து