முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் வீடு இல்லாத மீனவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும்: இ.பி.எஸ். அறிவிப்பு

வியாழக்கிழமை, 24 ஜூலை 2025      தமிழகம்
EPS 2020 11-16

Source: provided

பட்டுக்கோட்டை: அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் வீடு இல்லாத மீனவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் அரங்கத்தில் மாற்றுக்கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைத்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் விவசாய சங்க அமைப்பினர், தென்னை விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்களது கோரிக்கைகளை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:- பட்டுக்கோட்டை பகுதியில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளோம். குறுவை, சம்பா சாகுபடி தொகுப்பு கொடுத்தோம். உழவன் செயலியை அறிமுகப்படுத்தினோம். அதில் விவசாயிகளுக்கு தேவையான தகவல்களை வழங்கினோம்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினோம். அதுபோல் மீன்பிடித் தடைக்கால நிவாரணமும் அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தி வழங்கப்படும்.

தென்னை விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் செய்து தரப்படும்.  கஜா புயலின் போது சேதமான படகுகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கினோம். எனவே அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் உங்கள் அனைவரது கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும். மேலும் அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் வீடு இல்லாத மீனவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து