முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு பறக்கும் கிஷன்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2025      விளையாட்டு
test-match

Source: provided

இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நேற்று  முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து இருந்தது. ரிஷப்பண்ட் 37 ரன்னில் இருக்கும் போது காயத்தால் வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. 

அதில் ரிஷப் பண்டிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பண்ட் விலகினார். இதனால் 2-வது இன்னிங்சில் ரிஷப் பண்ட் விளையாடமாட்டார். இது இந்திய அணிக்கு பின்னடைவாகும். ரிஷப் பண்டிற்கு பதிலாக இஷான் கிஷன் இந்திய அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

64 பந்துகளில் ஆயுஷ் சதம் 

இந்திய யு19 கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டின் யு19 அணியுடன் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், 2 டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்தன. 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 309 ரன்களும், இந்தியா 279 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 324 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா இந்தப் போட்டியின் கடைசி நாளில் விரட்டியது. வைபவ் சூர்யவன்ஷி மற்றும் கேப்டன் ஆயுஷ் மாத்ரே இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த விஹான் மல்ஹோத்ரா உடன் 100 ரன்கள் மற்றும் அபிக்யான் குந்து உடன் இணைந்து 117 ரன்கள் பாரட்னர்ஷிப் அமைத்தார் ஆயுஷ் மாத்ரே. அவர் 64 பந்துகளில் சதம் கடந்தார். இந்திய அணி 43 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. கடைசி நாளின் ஆட்ட நேரம் முடிந்த காரணத்தால் இந்த டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சதம், 2-வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் விளாசி இருந்தார் 18 வயதான ஆயுஷ் மாத்ரே.

தெ.ஆ. அணியில் ப்ரீவிஸ் 

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இந்தப் போட்டிகள் வரும் ஆக.10ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இதில் பங்கேற்கும் தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எய்டன் மார்கரம் டி20 அணிக்கும் டெம்பா பவுமா ஒருநாள் அணிக்கும் கேப்டாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட்டில் ஜிம்பாம்வே அணிக்கு எதிராக அறிமுகமான சுழல் பந்துவீச்சாளர் ப்ரீனிலான் சுப்ராயன் டி20 அணியில் அறிமுகமாகியுள்ளார். 

சி.எஸ்.கே. அணியில் அசத்திய டெவால்டு ப்ரீவிஸ்ஸும், லுகான் - ட்ரெ பிரிடோரியஸும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார்கள். டி20 போட்டிகள் ஆக.10, 12,16 ஆம் தேதிகளிலும் ஒருநாள் போட்டிகள் ஆக.19,22,24 ஆம் தேதியும் தொடங்குகின்றன. கடைசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டியில் தோற்றது.  

காதலரை அறிவித்த வீனஸ் 

அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் (45 வயது) ஒற்றையர் பிரிவில் 7 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 16 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். டிசி ஓபன் ஒற்றையர் பிரிவில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் 6-3, 6-4 என்ற நேர்செட்களில் சக அமெரிக்க வீராங்கனையை வென்றார். போட்டி முடிந்த பிறகு அவர் பேசியதாவது: கடற்கரையில் ஓய்வெடுக்க வேண்டுமென எனக்குப் பல நேரங்களில் தோன்றியிருக்கிறது.  டென்னிஸ் விளையாடுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா நண்பர்களே? அதற்காக எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறது தெரியுமா? வழக்கமான 9 - 5 வேலையை விட கடினமானது. 

நாள் முழுவதும் உழைக்க வேண்டியிருக்கும். இந்தமாதிரி நேரங்களில் அவர் எனக்கு உற்சாகம் அளிக்கிறார். அவர் நான் விளையாடியதைப் பார்த்ததே இல்லை என்றார்.  டென்மார்க்கைச் சேர்ந்த ஆண்ட்ரியா பிரெடி இத்தாலியில் வாழ்ந்து வருகிறார். நடிகராக இருக்கும் இவரை வீனஸ் வில்லியம்ஸ் எப்போது சந்தித்து காதலித்தார் என்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இத்தாலியில் மாடலாக இருக்கும் ஆண்ட்ரியா பிரெடி பல இணையத் தொடர்களில் நடித்துள்ளார்.

ஓய்வு குறித்து ஆண்டர்சன்

இங்கிலாந்து அணியின் தலைசிறந்த ஸ்விங் பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.  கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் கடைசி போட்டியில் விளையாடினார். இந்த நிலையில் தான் முழு விருப்பத்துடன் ஓய்வு பெறவில்லை என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆண்டர்சன் கூறுகையில் "நான் கடந்த வருடம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன். ஆனால் முழு விருப்பத்துடன் ஓய்வு பெறவில்லை. 

கேப்டன், பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் வாரிய இயக்குனருடன் ஆலோசனையில் ஈடுபட்டேன். அப்போது அவர்கள் வேறு திசையில் செல்ல விரும்புவதாக தெரிவித்தார்கள்" என்றார். 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 704 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீ்ழ்த்திய வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து