முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்புமணிக்கு என்ன குறை வைத்தோம்: ராமதாஸ் வேதனை

வியாழக்கிழமை, 7 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Ramadoss-1

சென்னை, என் பிள்ளை அன்புமணிக்கு நாங்கள் என்ன குறைவைத்தோம் என்று ராமதாஸ் வேதனையுடன் தெரிவித்தார்.

பா.ம.க.வில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான  மோதல் தொடர்ந்து நீடித்து வரும் வரும் சூழலில், பா.ம.க.வின் தலைமை அலுவலகம் என்று அன்புமணி அலுவலகத்தின் முகவரியை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருந்தது. இது ராமதாஸ் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக சொல்லபடுகிறது. 

இந்த நிலையில், கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ஆக.17-ம் தேதி நடைபெறும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். ராமதாசுக்கு போட்டியாக வரும் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பை சேர்ந்த வடிவேல் ராவணன் அறிவித்துள்ளார். இருவரும் பொதுக்குழுவை அறிவித்ததால் பா.ம.க.வினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தைலாபுரம் வீட்டிற்கு என்னை சந்திக்க வந்ததாகவும், நான் மறுத்ததாகவும் அன்புமணி பொய் சொல்கிறார். கட்சியில் எனக்கு தெரியாமல் பல்வேறு உள்ளடி வேலைகளை அன்புமணி செய்து வந்தார். சூழ்ச்சி செய்து பா.ம.க.வை பறிப்பதற்கு அன்புமணி முயற்சி செய்கிறார்.  என் மீது பிரியமாக இருந்தவர்களை பணம் கொடுத்து அன்புமணி அவரது பக்கம் இழுத்தார்.

48 ஆண்டுகாலம் கட்சியை கட்டிக்காத்தது நான் தான். கடுமையாக உழைத்து தண்ணீருக்கு பதில் வியர்வையை ஊற்றி கட்சியை ஒரு ஆலமரமாக வளர்த்தேன். ஆலமரக்கிளையில் இருந்தே கோடாரியை செய்து அதே மரத்தை வெட்ட முயற்சிக்கிறார்.

என் பிள்ளை அன்புமணிக்கு நாங்கள் என்ன குறைவைத்தோம்? மிகச்சிறந்த கல்வி கொடுத்தேன், எம்.பி., மத்திய அமைச்சர் என ஆக்கி அழகு பார்த்தேன். பா.ம.க. நிறுவனராக புதிய நிர்வாகிகளை சேர்க்கவும் மாற்றவும் எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஐயா, ஐயா என்று சொன்னவர்களை ராமதாஸ் என்று சொல்ல வைத்தது அன்புமணி தான். அன்புமணியிடம் கட்சியை கொடுத்துவிட்டு நான் தைலாபுரத்தில் டம்மியாக இருக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து