முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட வோக்ஸ்

வியாழக்கிழமை, 7 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
7-Rsm-55

Source: provided

லண்டன்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்டதாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார்.

தொடர் சமன்...

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2-2 என சமன் செய்தது.

காலில் எலும்பு முறிவு... 

மான்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை அடிக்க முயன்று கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார்.

மன்னிப்பு கேட்டேன்...

தனது பந்துவீச்சில் ரிஷப் பந்த்தின் கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டதாக இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் அவர் பேசியதாவது: இன்ஸ்டாகிராமில் என்னுடைய புகைப்படத்தை சல்யூட் எமோஜியுடன் ரிஷப் பந்த் பகிர்ந்துள்ளார். அதனால், அவருக்கு நான் நன்றி கூறினேன். அவரது அன்புக்கு என்னுடைய நன்றியை தெரிவித்தேன். அவரது கால் தற்போது நன்றாக இருக்கும் என நம்புகிறேன். என்னுடைய பந்துவீச்சில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

நம்ப முடியாத விதம்...

காயத்துடன் ஓவல் டெஸ்ட்டில் நான் களமிறங்கியதை இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பாராட்டினார். உங்களது தைரியம் நம்பமுடியாத விதமாக இருக்கிறது எனக் கூறினார். இந்த தொடரில் நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள். உங்களது அணி சிறப்பாக செயல்பட்டது என அவரிடம் நான் கூறினேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து