முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய டி-20 அணியில் ஷ்ரேயாஸ் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கிறார்

வியாழக்கிழமை, 7 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
7-Ram-54

Source: provided

மும்பை: ஆசியக் கோப்பை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கழற்றி விடப்பட்டார்...

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அவர் கடைசியாக 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி இருந்தார். அதன்பின்னர், 2024 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் ஐ.பி.எல். கோப்பையை வென்று அசத்தினார். 

ரூ. 26.75 கோடிக்கு... 

மேலும், கொல்கத்தா அணியில் இருந்து விலகி நிகழாண்டு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி அவரை ரூ. 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐ.பி.எல்.லிலும் அதிரடியைத் தொடர்ந்த ஷ்ரேயஸ், 604 ரன்கள் குவித்து, பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்தார். 

சேர்க்க மறுப்பு...

அதுமட்டுமின்றி அவர் சையத் முஸ்டாக் அலி, ரஞ்சிக் கோப்பை, இரானி கோப்பை என அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் அசத்தினார். பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் கலட்டிவிடப்பட்டு, அதற்கு முழுமையான விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதன்பின் இந்திய டெஸ்ட் அணியிலும் ஷ்ரேயஸ் ஐயரை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் மறுத்து வந்தது.

ஆசியக் கோப்பையில்...

ஷ்ரேயஸ் ஐயர் சர்வதேச அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில்தான், சாம்பியன் டிராபியில் தேர்வு செய்யப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர், 5 போட்டிகளில் அதிரடியாக விளையாடி 243 ரன்கள் குவித்திருந்தார். இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பைத் தொடரிலும், சொந்த மண்ணில் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு ஷ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்படவுள்ளதாக பி.சி.சி.ஐ.-யின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

டெஸ்ட் போட்டிலும்... 

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் அக்டோபர் 10 முதல் 14 வரை தில்லியின் அருண் ஜேட்லி மைதானத்திலும் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து